சென்னை போரூர் அருகே வசிக்கும் கணேஷ் என்பவரின் பத்து வயது மகள் யோகஸ்ரீ இன்று தனது உறவுக்கார பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் ஐயப்பன்தாங்கல் பகுதியில் உள்ள கால்பந்து பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டு இருந்தார் ,போரூர் அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தின் பின்புறம் வந்த டிப்பர் லாரி மோதியதில் மூன்று பேரும் சாலையில் விழுந்துள்ளனர். இதில் யோகஸ்ரீ தலையில் லாரி சக்கரம் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலே பலியானார்