6 அம்ச கோரிக்கை வலியுறுத்தி திண்டுக்கல் திருச்சி சாலையில் உள்ள தாமரைப் பாடியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் குடோன் முன்பு இன்று 09.09.25 சி ஐ டி யு டாஸ்மாக் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றவர்கள் தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.