சண்முகபுரம் சாலையில் நேற்று இரவு விஜயகுமார் என்பவரது டீ கடை ,மற்றும் அருகில் கணேசன் என்பவரது டீ கடை என இரண்டு டீக்கடைகளில் சுமார் 5000 ருபாய் பூட்டை உடைத்து மர்ம நபர் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தட்டான்குளம் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் மர்ம நபர் பூட்டை உடைத்து திருட முயன்ற காட்சிகளும் பதிவு செய்யபட்டுள்ளது. கடை மற்றும் கோவிலில் நடைபெற்ற திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸார் விசாரணை.