சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆவணி திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் விழா மக்களின் சிறப்பு பணிவிடை உச்சிப்படிப்பு அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டமானது இன்று நடைபெற்றது இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் அய்யா வைகுண்டருக்கு பழம் வெற்றிலை பாக்கு பன்னீர் உள்ள பொருட்கள் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுருளாக வழங்கினார் இதில் நெல்லை தூத்துக்குடி குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்