சென்னை கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி வேலு நாச்சியாரின் திருஉருவ சிலையை 50 லட்சம் செலவில் தமிழக அரசு சார்பாக நிறுவப்பட்டது அதனை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் இந்நிகழ்வில் அமைச்சர்கள் வேலு, சேகர்பாபு, மற்றும் எம்பிகள், எம்எல்ஏக்கள் மேயர் துணை மேயர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.