சின்னகண்ணாலப்பட்டி பகுதியைச் சேர்ந்த சேகர் மனைவி புவனா என்பவர் வீட்டின் வெளியே நடந்து சென்று கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவருடைய வீட்டு நாய் வீட்டில் கட்டப்பட்டிருந்த சங்கிலியை அவிழ்த்துக்கொண்டு வெளியே வந்து புவனாவின் காலை கடித்துக் குதறி உள்ளது. இதனால் மயங்கிய புவனாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இதனால் காயங்களுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.