நிலக்கோட்டை அருகே உள்ள கல் கோட்டையைச் சேர்ந்த காசிராஜன் மனைவி வாசுகி (வயது 60) இவர் கடந்த பத்தாம் தேதி முதல் காணவில்லை என்று நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்தியாபிரபா அவர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். காணாமல் போனவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.