தூத்துக்குடி திரவியபுரம் 1வது தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் 91 வயதான இவர் நேற்று வயது மூப்பு காரணமாக இறந்துள்ளார் செல்வராஜ் தான் இருக்கும்போதே தான் இறந்தால் தன்னுடைய கண் மற்றும் உடலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக கொடுக்க வேண்டும் என எழுதிக் கொடுத்து வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து நேற்று மாலை அவரது இரண்டு கண்களையும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் வந்து தானமாக பெற்றுக் கொண்டனர்.