திருச்சி கோட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது ஈபி ரோடு அண்ணாநகர் ஆர்ச் அருகே சஞ்சய் என்பவர் சந்தேகமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் விற்பனைக்காக போதை மாத்திரை வைத்திருந்தது கண்டறியப்பட்டது உடனடியாக கோட்டை போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 10 மிகி 39 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது