ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 9.57 முதல் அதிகாலை 1.26 வரை சந்திரகிரஹணம் சம்பவிப்பதால் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணி முதல் அதிகாலை திங்கள் கிழமை 3.30 வரை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கிரஹணாபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து அர்த்தஜாம பூஜை, திருப்பள்ளியெழுச்சி ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்று முன் வழக்கம்போல் அன்றாட பூஜைகள் நடைபெறும் என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது