திருப்பத்தூர் அருகே தேவரம்பூர் கண்மாய் கரை அருகே சிறிய வீட்டில் வசித்து வருபவர் செல்வம் (60).கோட்டைச்சாமி என்பவர் இந்த வீடு தமக்கு சொந்தமானது கூறி செல்வத்தை காலி செய்து கொள்ள வலியுறுத்தியுள்ளார். போலீசார் வீட்டை காலி செய்து கொள்ள அறிவுருத்தி அவகாசம் கேட்டு இருந்த நிலையில் செல்வம் வீட்டிற்கு வந்து பார்க்கையில் இவரது வீட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள் மேற்கூரைகளை பிரித்து, பொருட்களை வெளியே வீசியும், வீட்டை முற்றிலுமாக இடித்து தரை மட்டமாக்கிவிட்டு வீடு இருந்த இடம் தெரியாத அளவிற்கு காலி செய்துள்ளனர்.