பழனி ஜவஹர் நகர் பகுதியில் மளிகை கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இன்று காலை ஜஸ்டின் அமல்ராஜ் மற்றும் அவரது உதவியாளர் கருப்புசாமி உடன் அந்த மளிகை கடைக்கு சோதனைக்கு சென்றார். அப்போது சோதனை செய்ய முயன்ற போது அந்த கடையின் உரிமையாளர் ராஜ வடிவில் என்பவர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை அடித்தும் கீழே தள்ளியும் சட்டையை கிழித்தும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.