திருவேற்காடு ஈஸ்வரன் நகர் பகுதியை சேர்ந்தவர் வடிவேலு இவர் அதே பகுதியில் கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார் ஞாயிற்றுக்கிழமையான இன்று கறிக்கடையில் வியாபாரம் செய்திருந்த வடிவேலு டீ வாங்குவதற்காக மதியம் அருகே உள்ள தேநீர் கடைக்கு சென்றுள்ளார் டீ வாங்கிக் கொண்டு மீண்டும் கடைக்கு திரும்ப வடிவேலு இருசக்கர வாகனத்தில் ஏறிய போது திடீரென்று அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று வடிவேலின் காலில் கடித்துள்ளது