ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் இருந்து விநாயகர் ஊர்வலமாக சென்று ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காட்டு பிள்ளையார் கோவிலுக்கு வருடாவருடம் செல்வது வழக்கம். அதே போல் இன்று விநாயகர் சதுர்த்தியை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் இருந்து வெள்ளி மூஷிக வாகனத்தில் பிள்ளையார் எழுந்தருளி பல்லககில்; ஊர்வலமாக சென்று கொண்டிருந்தபோது பல்லக்கிற்கு முன்பாக சென்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் யானை ராமலட்சுமி திடீரென தனது துதிக்கையை தூக்கி விநாயகரை கும்பிட்டது.