திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையத்திற்கும் கொளத்தூர் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் மதுரையில் இருந்து டிக்கெட் எடுத்து ஏதோ ஒரு ரயில் வண்டியில் பயணம் செய்து வந்தவர் ரயில் வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்து முன் பக்க மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்