ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே பால் ஏற்றி வந்த டேங்கர் லாரியின் முன்பக்க சேஸ் உடைந்து விபத்துகுள்ளானது. இந்த விபத்தின் பொழுது லாரியின் டீசல் டேங்கும் உடைந்ததால் சாலையில் டீசல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சாலையில் கிடந்த டீசல் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து பின்னர் கிரேன் உதவியுடன் லாரியை பாதுகாப்பாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.