தலக்குளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் இவர் இரணியல் அருகே புதுவிளை பகுதியில் ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன் தினம் ஹோட்டலில் விறகுகளை எடுத்த போது பிஷப் பூச்சி கடித்து உயிருக்கு போராடிய நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிர் இழந்தார் இதுகுறித்த புகாரியில் இரணியல் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்