நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகின்ற 27ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் சிக்ஸ் பேக், வீர விநாயகர் உட்பட விதவிதமான விநாயகர் சிலைகள் அமோகமாக விற்பனையாகி வருகிறது. ஜோலார்பேட்டை அருகே உள்ள கட்டேரி பகுதியில் தண்டாயுதம் வைத்து கொண்டு மிரட்டுவது போல இருக்கும் வீர விநாயகர், சிவன் வடிவில் இருக்கும் சிக்ஸ்பேக் வைத்த விநாயகர் சிலை உட்பட பல்வேறு வண்ணங்களிலும், வடிவுகளிலும் அரை அடி முதல் 10 அடி சிலைகள் வரை அமோகமாக விற்பனை நடைபெற்று வருகிறது. வண்ண வண்ண சிலைகள் இருப்பதால் குழந்தைகள் பெரியவர்கள் சிலைகளை வாங்குவதற்காக ஆர்வம் காட்டி வருகின்றனர்