உளுந்தூர்பேட்டையில் உள்ள பழமையான ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஒரு லட்சம் வளையல்கள் அணிவித்து தங்கக்காப்பு அலங்காரத்தில் மகாதீபாரதனைகள் நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற அம்மனை வழிபட்டனர்.