காரைக்குடி அருகே இலுப்பக்குடி நொண்டி முனீஸ்வரர் கோவில் 49 ஆம் ஆண்டு பூச்செரிதல் விழாவை முன்னிட்டு இரட்டைமாட்டு வண்டி எல்லைப் பந்தயம் நடைபெற்றது.தெற்கு குடியிருப்பு - இலுப்பக்குடி - மாத்தூர் -சாலையில் பெரிய மாடு, சிறிய மாடு என 2 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. பெரியமாடு பிரிவில் 10 ஜோடிகளும், சின்ன மாடு பிரிவில் 22 ஜோடிகள் என மொத்தம் 32 மாட்டுவண்டிகள் பங்கேற்றன.வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.