இளையான்குடி சாலையூர் பகுதி முதல் கண்மாய்க்கரை பகுதி வரை நகர் முழுவதும் பிப்ரவரி 28ஆம் தேதி புதன்கிழமை மாலை, எங்கள் தொகுதி எம் பி யை எங்கேயும் காணவில்லை, கண்டா வர சொல்லுங்க என்ற சுவரொட்டி நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி மக்கள் சார்பாக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் நகர் முழுவதும் தற்பொழுது ஒட்டப்பட்டுள்ளதால் இளையான்குடி பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.