தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆவணி மாதம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு காலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மக்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.