கருங்குளம் பகுதியில் திங்கட்கிழமை மாலையில் திடீரென சூறைக்காற்று அடித்தது. இந்த சூறைக்காற்றின் காரணமாக திருநெல்வேலி -திருச்செந்தூர் சாலையில் உள்ள மிகவும் பழமையான மருதமரம் ஒன்று திடீரென சரிந்து சாலையில் விழுந்தது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.