விநாயகர் சிலை ஊர்வலமாக பொதுமக்களால் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துவரப்பட்டது. வத்தலகுண்டு சாலை சிக்னல் முதல் TPKN பள்ளி வரை தாரை தப்பாட்டை முழுங்க கூடாது என அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் தாரை தப்பாட்டை அடிக்க தடை செய்யப்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலையை நிறுத்தி தாரை தப்பாட்டை அதிக சத்தமாக அடித்ததால், பள்ளிவாசல் முன்பு இருந்த இஸ்லாமியர்கள் திடீரென அமைதிப் பேச்சுவார்த்தை மீறி செய்த செயலை கண்டித்து காவல் துறையை கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.