திருச்சி மேல பஞ்சப்பூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (வயது36). இவரது தந்தை ராஜு (வயது 65, ) சகோதரர் கார்த்திக் (வயது32. ) இவர்கள் மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 39) அஞ்சலை (வயது45) மற்றும் ராமமூர்த்தி (வயது26) ஆகியோர் பொதுபாதை பயன்படுத்துவதில் முன் விரோதம் இருந்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.