தமிழகத்தில் அரசு பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது இந்த நிலையில் மாதர் கோவிலில் அமைந்துள்ள புனித ஜோசப் கான்வென்ட் தொடக்கப் பள்ளியில் நடைபெற்று வரும் காலை உணவு திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று ஆய்வு மேற்கொண்டார் இதை தொடர்ந்து மாணவ மாணவியர்களுடன் அவர் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்