கரூரிலிருந்து சரக்கு வாகனம் ஒன்று மதுரைக்குச் சென்று மரக்கன்றுகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் கரூரை நோக்கி திங்கள்கிழமை அதிகாலை 3 மணி அளவில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பேட்டரிக் பள்ளி முன்பாக வந்து கொண்டிருந்தது. அப்பொழுது பின்னால் வந்த லாரி சரக்கு வாகனத்தின் மீது உரசி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதனால் நிலை தடுமாறிய சரக்கு வாகனம் சாலையோரம் இருந்த எச்சரிக்கை பலகையை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் இறங்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சரக்கு வாகனத்தில் வந்த இருவரும் காயம் இன்றி தப்பினர்.