திருவாரூரில் இருந்து புதுச்சேரி வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் சென்னை நோக்கி அரசு சொகுசு பேருந்து இன்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது மரக்காணம் தாழங்காடு அருகே முன்னாள் சென்ற பேருந்தை முந்த முற்பட்டபோது, சாலையோரம் உள்ள 10 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்த பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து மரக்காணம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.