சிவகங்கை மாவட்டத்தில் கோடை வெயிலால் அவதிப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திங்கட்கிழமை இரவு சிங்கம்புணரியில் 54.40 மி.மீ., காளையார்கோவிலில் 28.60 மி.மீ., சிவகங்கை மற்றும் திருப்பத்தூரில் தலா 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 9.44 மி.மீ. மற்றும் மொத்தம் 85 மி.மீ. மழை பெய்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.