திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் பின்னணி பாடகர் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நினைவிடம் அமைந்துள்ளது. எஸ்பிபியின் 5 வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது, மணிமண்டபம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் அவர் நினைவிடத்திற்கு ரசிகர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பண்ணை வீட்டின் வெளியே வைத்திருந்த அவர் உருவப் படத்திற்கு மலர் தூவி ரசிகர்கள் மரியாதை செலுத்தினர்