ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டதை ஒட்டி பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனை தொடர்ந்து அருகே உள்ள திருமண மண்டபத்தில் மாவட்ட பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.