ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சியின் புதிய தலைவராக குல்சார் அகமது மற்றும் நகரமன்ற துணைத் தலைவராக ஜாபர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மேல்விஷாரம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது. முன்னதாக நகர மன்ற தலைவர் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் ஆகியோர் உறுதி மொழியினை ஏற்று முறைப்படி புதிய தலைவர் மற்றும் துணைத் தலைவராக பொறுப்பேற்றனர்