தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு கோவில்பட்டி தொகுதி இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பாக வாக்குத் திருட்டுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் சூரிய பிரகாஷ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு திருட்டுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.