ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புங்கனூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரவிக்குமார் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் உள்ளிட்டோர் நேரில் சென்று ரவிக்குமாரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்