அரசு பள்ளி மாணவி 5 மாத கர்ப்பம் போக்சோ சட்டத்தில் தற்காலிக ஆசிரியர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (26) இவர் அஞ்செட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவர் அந்த பகுதியில் வேறொரு அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயதுள்ள பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கி உள்ளார். மாணவி தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார்.