லூயிஸ் லெவல் மெட்ரிக் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் ள அனைவரும் ஒன்றிணைந்து 20 லட்சம் மதிப்புள்ள auditorium கலையரங்கத்தை தாங்கள் பயின்ற பள்ளிக்கு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கட்டி கொடுத்து, அதனை அருட் பங்குத்தந்தை சிங்கராயர் மற்றும் அருட் சகோதரி தனமேரி ஆகியவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். பின்னர் குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தனர்.விழாவின் தொடக்கத்தில் ஆசிரியர் தினமான இன்று பழைய மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர் பெருமக்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றனர்