ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்ய அழைத்துவரப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவரை காண வந்த மனைவி மற்றும் அவரது மகளை காவலில் இருந்த ஆய்வாளர் குமார் தடுத்து நிறுத்தியதை அடுத்து அவர்கள் இருவரும் அழுது கொண்டே மருத்துவமனையில் நின்றிருந்தனர். போலீஸா இருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.