ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாராஞ்சி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது முகாமில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி சந்திர கலா சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து முகாமில் உடனடியாக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்