ஈசாந்தி மங்கலத்தை சேர்ந்தவர் வினோத் இவரது மனைவி மோனிஷா. மோனிஷாவிற்கு பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் குழந்தை பிறந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக குழந்தை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தை நேற்று உயிரிழந்தது மருத்துவர்கள் அலட்சியத்தால் குழந்தை இறந்ததாக உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்து தொடர்ந்து குழந்தையின் உடல் இன்று ஒப்படைக்கப்பட்டது