திண்டுக்கல் அருகே உள்ள நாராயண பிள்ளை தோட்டத்தில் வசித்து வரும் வெங்கடேசன் தனது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு பெயிண்ட் அடிக்க முனிசிபல் காலனி பகுதியைச் சேர்ந்த நாகமணி 29. தினேஷ்குமார் 20 ஆகிய இரண்டு இளைஞர்களையும் இன்று காலை வரச் சொல்லியுள்ளார். தண்ணீர் தொட்டியில் உள்ளே இறங்கி பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த பொழுது திடீரென ஒருவன் பின் ஒருவராக மயங்கி விழுந்துள்ளனர் இதைக்கண்ட வீட்டின் உரிமையாளர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.