குஜிலியம்பாறை தாலுகா கரிக்காலி அரசு நடுநிலைப் பள்ளியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு பேனா பென்சில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு குஜிலியம்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் கர்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் செயலாளர்கள் கணேசன், வேல்முருகன், சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் அறிவழகன் செய்திருந்தார்.