வாணியம்பாடி அடுத்த ஆலாங்காயம் அருகே மதனாஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட குட்டைபெருமாள் கோவில் வட்டம் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அதிகாரிகள் அளவீடு செய்ய வந்த போது அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை VAO அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.