கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள லக்கேபாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மதுர காளியம்மன் கோவில் புனரமைப்பு பணிகள் முடிவு பெற்று மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது யாக சாலையில் வைக்கப்பட்ட புனித நீர் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்