ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் 5.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் திருமதி சந்திரகலா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்