முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நகர்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று விரிவுப்படுத்தப்பட்டது. திருச்சி மேலப்புதூரில் உள்ள ஃபிலோமினாஸ் பள்ளியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அந்த திட்டத்தை தொடக்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.