ஏடி பன்னீர்செல்வம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் குஞ்சிதபாதம் வயது 80.இவருக்கு இரு வேறு whatsapp நம்பரிலிருந்து வீடியோ அழைப்பு வந்துள்ளது.அதில் உங்கள் முகவரிக்கு சட்டவிரோதமான கடத்தல் பொருள் பார்சல் வந்ததுள்ளது என்று கூறி டிஜிட்டல் அரெஸ்ட் முறையில் அவரிடம் நீங்கள் பணம் கொடுக்க வில்லை என்றால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என்று கூறி மிரட்டி உள்ளனர். இதனையடுத்து பதற்றம் அடைந்த குஞ்சிதபாதம் குறிப்பிட்ட மூன்று வங்கிக் கணக்கிற்கு 7 தவணையாக 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பி உள்ளார்