திருச்சியில் இந்து அமைப்புகள், குடியிருப்போா் சங்கங்கள், சமூக அமைப்புகள் சாா்பில் திருச்சி மாநகரில் 200க்கும் மேற்பட்ட சிலைகளும், புறநகரில் 800க்கும் மேற்பட்ட சிலைகளும் என மொத்தம் 1,000 சிலைகளுக்கு மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதேபோல பொதுமக்கள் வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகா் சிலைகளை வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர் அந்த சிலைகள் இன்று காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன