திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த திருவள்ளரை கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 45 ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர் . இப்பகுதி பொதுமக்களுக்கு பட்டா வேண்டி பலமுறை மாவட்ட ஆட்சியர் ,லால்குடி கோட்டாட்சியர் , மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் ஆகியோரிடம் மனு அளித்தும் பட்டா கொடுக்கவில்லை என 2026 தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.