விருதுநகர் எம்ஜிஆர் சிலை அருகில் ரோட்டரி சங்க கட்டிடத்தில் இருந்து கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது ரோட்டரி சங்கம் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய பேரணியை மாவட்ட எஸ்பி கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார் . பேரணி மெயின் பஜார் வழியாக காமராஜர் நடுநிலைப்பள்ளியை வந்தடைந்தது. டிஎஸ்பி யோகேஷ் குமார் காவல் துறையினர் மருத்துவர்கள் செவிலியர்கள் கல்லூரி மாணவர்கள் ரோட்டரி சங்கம் நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.