ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை நகரில் உள்ள VRV பள்ளியில் தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்ட தொடக்க விழா நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி சந்திரகலா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களோடு இணைந்து காலை உணவு உண்டு மகிழ்ந்தார்